கத்தாரில் முகக்கவசம் கட்டாயம்; மீறினால் 2,00,000 அபராதம் மற்றும் 3 வருடம் சிறை.!

Qatar makes wearing masks compulsory for shoppers, service sector and construction sector employees.

கத்தாரில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், முகக்கவசம் (FaceMask) அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் நேற்று (22-04-2020) நடைபெற்ற கத்தார் அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஷாப்பிங் செய்பவர்கள், சேவைத்துறையில் பணிபுரியும் நபர்கள், கட்டுமானத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் போன்றவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் யாரும் சூப்பர் மார்க்கெட்களில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்மானமானது, வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என்று கூறியுள்ளது.

கட்டுமானத் துறையில் உள்ள தொழிலாளர்கள் தங்கள் கடமைகளையும், பணிகளையும் செய்யும்போது, முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும் என்றும், இந்த முகக்கவசங்களை பணிபுரியும் நிறுவனத்தினால் இவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கடைப்பிடிக்காதவர்களுக்கு 3 வருட சிறை மற்றும் 2,00,000 ரியால் அபராதம் அல்லது இதில் ஏதாவது ஒன்று தண்டனையாக வழங்கப்படும் என்று கத்தார் அமைச்சரவை அறிவித்துள்ளது.