கத்தார் தேசிய தினம்: விடுமுறை நாட்களை அறிவித்தது அமிரி திவான்.!

Qatar National Day Holidays
Pic: The Peninsula

கத்தாரில் வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தேசிய தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில், கத்தார் தேசிய தினத்தை முன்னிட்டு, அமிரி திவான் விடுமுறை நாட்களை இன்று அறிவித்துள்ளது.

கத்தாரில் இந்த மாத இறுதிக்குள் வரவிருக்கும் கோவிட்-19 தடுப்பூசிகள்.!

கத்தார் தேசிய தினத்தை முன்னிட்டு வரும் டிசம்பர் (17-12-2020) வியாழக்கிழமை உத்தியோகபூர்வ விடுமுறை என்றும், ஊழியர்கள் டிசம்பர் 20 ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தங்கள் பணிக்கு திரும்புவார்கள் என்றும் அமிரி திவான் தெரிவித்துள்ளது.

மேலும், தேசிய தினம் வருவதற்கு முன்னதாகவே, குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடி மற்றும் பிற பொருட்களை கொண்டு அலங்கரிதுள்ளனர்.

கத்தார் தேசிய தினம்: இந்த அருங்காட்சியகத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…