கத்தார் தேசிய தின அணிவகுப்பில் இவர்களுக்கு மட்டுமே அனுமதி.!

Qatar National Day parade
Pic: The Peninsula Qatar

கத்தார் நாட்டில் வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தேசிய தினம் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கின்றது.

இந்நிலையில், கத்தார் 2020 தேசிய தின கொண்டாட்டங்களுக்கான ஏற்பாட்டுக் குழு இந்த ஆண்டின் தேசிய தின அணிவகுப்பில் கலந்து கொள்ள சிறப்பு அழைப்பார்களுக்கு மட்டுமே இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

கத்தார் MOPH குறைந்த ஆபத்துள்ள நாடுகளின் புதுப்பிப்பு பட்டியல் வெளியீடு.!

சிறப்பு அழைப்பார்களில் சுகாதாரத் துறையின் குடும்பங்கள் மற்றும் பங்கேற்கும் நிறுவனங்கள் மட்டுமே அடங்கும்‌ என கூறப்பட்டுள்ளது.

கத்தார் தேசிய தின கொண்டாட்டங்கள் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களின் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில், விதிவிலக்கான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இணங்க இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் தேசிய தினம்: விடுமுறை நாட்களை அறிவித்தது அமிரி திவான்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…