கத்தார் தேசிய தினம்: கடைகளில் களைகட்டும் பொருட்களின் விற்பனை.!

Qatar National Day Sales
Pic: Qassim Rahmatullah/The Peninsula

கத்தாரில் வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி தேசிய தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ள நிலையில், புதிய நினைவுப் பொருட்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் சந்தைபடுத்தப்பட்டுள்ளது.

கத்தார் கொடி அச்சிடப்பட்ட ஸ்டிக்கர்கள், அலங்கார துண்டுகள், பலூன்கள், டி-சர்ட்டுகள், ஜாக்கெட், பேக்குகள், badges, scarves, trousers மற்றும் Key chains போன்ற பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

கத்தாரில் உள்ளூரில் விளையும் காய்கறிகள் விற்பனை அதிகரிப்பு.!

தேசிய தினம் வருவதற்கு முன்னதாகவே, குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடி மற்றும் பிற பொருட்களை கொண்டு அலங்கரிதுள்ளனர்.

கத்தார் தேசிய கொடியுடன் அச்சிடப்பட்ட அழகான ஆடைகள், தொப்பிகள், trousers, மற்றும் frocks, டி-சர்ட்டுகள் ஆகியவை முக்கிய ஷாப்பிங் மையங்களில் பிரத்யேக இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

தேசிய தின பொருட்கள் ஏராளமான வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றது என்றும், வருகின்ற நாட்களில் இதற்கான தேவை அதிகரிக்கும் என்று கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

கத்தார் தோஹாவில் உள்ள இந்த தெரு ஆறு மாதங்களுக்கு மூடல்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…