சாந்திநிகேதன் இந்தியன் பள்ளியில், கத்தார் விளையாட்டு தினம் கொண்டாட்டம்..!

Qatar-national-sports-day-celebrated-by-parents-and-teachers-at-SIS.

கத்தார் நாட்டில் உள்ள சாந்திநிகேதன் இந்தியன் பள்ளியில், கத்தார் தேசிய விளையாட்டு தினத்தை கொண்டாடும் வகையில், பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

கத்தார் விளையாட்டு தினத்தை முன்னிட்டு, சாந்திநிகேதன் இந்தியன் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட கால்பந்து போட்டி, பூப்பந்து போட்டி, டேபிள் டென்னிஸ் மற்றும் தடகள போட்டிகளில் பங்கேற்று பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்கள் தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.

பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களிடையே விளையாட்டுத் திறனின் இணக்கமான சூழலை வளர்த்துக் கொள்ளவும், வலுப்படுத்தவும் இந்த போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர் டாக்டர் சுபாஷ் நாயர் மற்றும் மூத்த துணை முதல்வர் ஷிஹாபுதீன் புலத் மற்றும் துணை முதல்வர் டட்லி ஓ’கானர் (Dudley O’Connor ) ஆகியோர் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.