கத்தாரில் கொரோனாவால் புதிய சிக்கல் ஏற்பட வாய்ப்பு: MoPH அதிகாரி எச்சரிக்கை.!

Covid vaccine doses
Pic: Qatar Television

கொரோனா வைரஸ் ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு பரவும் போது தொடர்ந்து மாற்றம் அடைந்து வருகிறது, இது கத்தார் நாட்டை அடைந்திருக்கலாம் என COVID-19 தேசிய சுகாதார மூலோபாயக் குழுவின் தலைவரும், ஹமாத் மருத்துவக் கழகத்தின் தொற்று நோய்களின் தலைவருமான Dr.Abdullatif Al Khal எச்சரித்துள்ளார்.

இந்த செய்தியை கத்தார் தொலைக்காட்சியில் பொது சுகாதார அமைச்சகம் (MoPH), உள்துறை அமைச்சகம் (MoI) மற்றும் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் (MoCI) ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளின் கூட்டு செய்தியாளர் சந்திப்பு ஒளிபரப்பின் போது Dr.Abdullatif Al Khal தெரிவித்தார்.

இந்தியா உட்பட 20 நாடுகளுக்கு விமான முன்பதிவை நிறுத்தியது கத்தார் ஏர்வேஸ்.!

மேலும், இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவில் இரண்டு புதிய சிரமங்கள் கண்டறியப்பட்டுள்ளது மற்றும் இது வளைகுடா நாடுகளை அடைந்துள்ளதால் கத்தார் நாட்டை அடைந்திருக்கலாம் என அவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸின் இரண்டாம் அலையின் அளவு தெளிவாக இல்லை என்றும், இரண்டாம் அலையின் தீவிரத்தைத் தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சமூக ஒத்துழைப்புடன் எடுக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.

கத்தாரில் கொரோனா காரணமாக மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு; இன்று முதல் அமல்படுத்தப்படுகின்றன.!

கத்தார் நான்கு அடுக்கு கட்டுப்பாடுகளை மறுசீரமைக்க திட்டமிட்டுள்ளது என்றும், திருமணங்களுக்கும், ஒன்றுகூடுவதற்கும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படவில்லை என்றால் அவை முற்றிலுமாக நிறுத்தப்படும் என்றும் Dr.Abdullatif Al Khal கூறியுள்ளார்.