கத்தார் தொழிலாளர் அமைச்சகத்தின் அப்ளிகேசன் தற்போது 33 சேவைகளுடன்..!

Qatar- New version of Labour Ministry's mobile app offers 33 services. (Image source : Proxym group)

பயனாளர்கள், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் நேரத்தையும் வேலைச்சுமையை மிச்சப்படுத்துவதற்காக அரபு மற்றும் ஆங்கில மொழிகளில் ஸ்மார்ட் போன்களில் ‘Amerni’ என்ற அப்ளிகேசன் பயன்பாட்டிற்கான மூன்றாவது இணைப்பு மின்னணு சேவைகளை நிர்வாக மேம்பாடு துறை, தொழிலாளர் மற்றும் சமூக விவகார அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த மூன்றாவது இணைப்பு ஐந்து புதிய சேவைகளை உள்ளடக்கியது. தற்போது தனிநபர்களுக்கான 21 சேவைகள் மற்றும் நிறுவனங்களுக்கு 12 சேவைகள் உட்பட மொத்தம் 33 சேவைகளை வழங்குகிறது என்று அமைச்சகம் தனது “Mobile Application Guide” என்ற பதிவில் இணையதளத்தில் வெளியிட்டது.

இந்த அப்ளிகேசனின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று, சேவைகளைக் பெறுவதற்கும் அவற்றைப் பற்றி விசாரிப்பதற்கும் மிகவும் சுலபமாகும். மேலும், பயனர்கள் மூன்று சுலபமான முறைகளின் மூலம் பதிவை தொடங்கி பயன்படுத்தலாம்.

இந்த ‘Amerni’ அப்ளிகேசன் மூலம் வீட்டுவசதி விண்ணப்பங்களை பின்தொடர்தல்,வாடகை கொடுப்பது, வீடு வாங்குதல்-உரிமை கோரிக்கை, தலைப்பு பத்திரம் கோரிக்கை, தவணை விதிவிலக்கு கோரிக்கை, தொழிலாளர் குடியிருப்பு நீட்டிப்பு, நிறுவன பரிவர்த்தனை இடைநீக்கம் பின்தொடர்தல் போன்ற சேவைகளை உள்ளடக்கியது.

இந்த அப்ளிகேசன் ஆப்பிளின் ஆப் ஸ்டோர் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான கூகிள் பிளே ஆகியவற்றில் அரபு மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் கிடைக்கிறது.

பயனர்கள் Individuals என்பதைக் கிளிக் செய்யும் போது, ​​அது தனிநபர்கள் தொடர்பான சேவைகளைக் காட்டும். மேலும், அவர் corporate என்பதைக் கிளிக் செய்யும் போது அது கார்ப்பரேட் தொடர்பான சேவைகளைக் பயனர்களுக்கு வழங்கும்.

NEWS Source : MENAFN