கத்தாரில் ஒருங்கிணைந்த தமிழர் பேரவை ICBF-யின் கீழ் இணைந்து செயற்படுவதற்கு இந்திய தூதரகத்தால் அங்கீகாரம் பெற்றது.!

Qatar OTP Joined ICBF
Pic: OTP

கத்தாரில் கடந்த புதன்கிழமை (10-02-2021) அன்று மாலை 6 மணியளவில் இந்திய தூதரகத்தின் கீழ் செயல்படும் ICBF AO Team ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், ஒருங்கிணைந்த தமிழர் பேரவை நிர்வாகிகள் கலந்துகொண்டு கருத்துக்களை முன்னெடுத்து வைத்தனர். அதன் பின்னர், இந்திய தூதரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழை ஒருங்கிணைந்த தமிழர் பேரவையின் நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்.

கத்தாரில் அதிகரிக்கும் கொரோனா: இன்று (பிப்.14) புதிதாக 440 பேர் பாதிப்பு..!

இதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஒருங்கிணைந்த தமிழர் பேரவை நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ICBF-யின் தலைவர் ஜியாத் உஸ்மான் மற்றும் துணை தலைவர் வினோத் நாயர் மற்றும் பொதுச் செயலாளர் சபித் சாஹீர் அனைவரையும் ஒருங்கிணைந்த தமிழர் பேரவை நிர்வாகிகள் தலைவர் சமீர் அகமது, துணை தலைவர் இப்ராஹிம், பொருளாளர் வலியுல்லாஹ், துணை செயலாளர்கள் சிவராமன், குமார், இசாக், மற்றும் விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் செழியன் மற்றும் ஆலோசகர் கதிர் அகமது ஆகியோரை சந்தித்து சால்வை அணிவித்து கெளரவித்தனர்.

FIFA Club World Cup விருது வழங்கும் நிகழ்ச்சி: பெண் நடுவர்களுடன் கைகுலுக்க மறுத்த கத்தார் இளவரசர்.!