கத்தார் பெட்ரோலியத்தின் மே மாதத்திற்கான எரிபொருள் விலைகள்.!

Image Source : The Peninsula Qatar

கத்தார் பெட்ரோலியம் மே மாதத்திற்கான எரிபொருள் விலைகளை நேற்று (30-04-2020) அறிவித்துள்ளது. புதிய விலைப் பட்டியலின்படி, மே 01 முதல் பிரீமியம் பெட்ரோல், லிட்டருக்கு QR 1.00 ரியால்களாக விற்பனையாகும். இது ஏப்ரல் மாதத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 25 திர்ஹம்கள் குறைவானதாகும்.

மேலும், சூப்பர் பெட்ரோல் மே மாதத்தில் ஒரு லிட்டருக்கு QR 1.05 ரியால்களுக்கு விற்பனையாகும். இது கடந்த மாத விலையிலிருந்து 25 திர்ஹம்கள் குறைவாக உள்ளது.

மே 01 முதல், ஒரு லிட்டர் டீசல் QR 1.05 ரியால்களுக்கு விற்பனையாகும். இது மே மாதத்தில் விற்ற டீசல் விலையை விட 25 திர்ஹம்கள் குறைவாகும்.