கத்தார் ரயில் 300 குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்துமிடங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது..!

Qatar Rail setting up 300 AC bus shelters
Pic: Qatar Rail

கத்தார் ரயில் (Qatar Rail), தோஹா மெட்ரோ நிலையங்களைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில், 300 குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்துமிடங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த பேருந்து நிறுத்தங்கள், பொது போக்குவரத்து பேருந்துகள் மற்றும் மெட்ரோலிங்க் (Metrolink) பயனர்களுக்கு சேவை செய்யக்கூடிய வகையில் அர்ப்பணிக்கப்பட்டவை என கத்தார் ரயில் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது‌.

இதையும் படிங்க: தோஹா மெட்ரோ The Pearl-Qatar பகுதியை இணைக்கும் புதிய மெட்ரோலிங்க் சேவை அறிமுகம்.! 

முன்னதாக, கத்தார் ரயில், தோஹா மெட்ரோ நிலையங்களுக்கு அருகில், 300 பேருந்து நிறுத்தங்களை (Bus Stops) தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதாக கூறியிருந்தது.

இந்த பேருந்து நிறுத்தங்கள், பிரகாசமான சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளது என்றும், இவை நிலையங்களுக்கு அடுத்துள்ள பயணிகளை ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் வசதியாக இருக்கும் என்றும் கத்தார் ரயில் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தார் ஏர்வேஸ் இந்தியாவின் 11 நகரங்களுக்கு விமான சேவைகளை தொடங்கியது..!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Related posts

கத்தார் அமீர் லெபனானில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ QAR 50 மில்லியன் நன்கொடை.!

Editor

சவுதி அரேபியாவில் இன்று முதல் ஹஜ் புனிதப் பயணம் துவக்கம்.! 

Editor

கத்தாரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் இருவர் மரணம்.!

Editor