கத்தார் உலகளாவிய சுகாதார அளவீடுகளின் தரவரிசையில், மிக உயர்ந்த இடம்.!

அரசாங்க தகவல் தொடர்பு அலுவலகம் (GCO) வெளியிட்டுள்ள விளக்கப்படத்தின்படி, மருந்துகளின் தன்னிறைவுக்கான கத்தாரின் முதலீடு அதன் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்துகிறது என கூறியுள்ளது.

கத்தார் பல முக்கிய உலகளாவிய சுகாதார அளவீடுகளின் தரவரிசையில், மிக உயர்ந்த இடத்தில் உள்ளது.

தனிநபர் மருத்துவர்களைப் பொறுத்தவரை கத்தார் முதலிடம்

உலக சுகாதார அமைப்பின் (WHO) படி, 10,000 பேருக்கு 77.4 மருத்துவர்கள் உள்ளனர். கத்தார் உலகில் தனிநபர் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகம் கொண்டுள்ளது என்று GCO தெரிவித்துள்ளது.

சுகாதாரத்துறையில் திருப்தி அடிப்படையில் கத்தார் நான்காவது இடம்

கத்தார் அதன் சுகாதார உள்கட்டமைப்பில் பெருமளவில் முதலீடு செய்துள்ளது. இது உலகின் மிக உயர்ந்த மக்கள் தொகை திருப்திக்கு வழிவகுக்கிறது என்று லெகாட்டம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகளவில் சுகாதாரத்திற்கான முதல் ஐந்து இடங்களிலும் பிராந்தியத்தின் தரவரிசையில், முதலாவது இடத்திலும் கத்தார் இருப்பதாக லெகாட்டம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2019 லெகாட்டம் (Legatum) அபிவிருத்தி தரவரிசையில், கத்தார் உலகளவில் ஆரோக்கியத்திற்காக முதல் ஐந்து இடங்களில் உள்ளது என்றும் மேலும், பிராந்தியத்தில் முதலாவது இடத்திலும் உள்ளது என்றும் GCO தெரிவித்துள்ளது.

மேலும், கத்தார் மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் இரண்டிலும் 100% தன்னிறைவை அடைவதற்கு பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது என்று GCO சுட்டிக் காட்டியுள்ளது.

எந்த நேரத்திலும், ஹமாத் மருத்துவமனை அனைத்து முக்கிய மருந்துகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் போதிய இருப்புக்களை பராமரித்து வருகிறது என்று GCO தெரிவித்துள்ளது.

Source : QSMS