கத்தாரின் சில பகுதிகளில் பரவலான மழை.! (காணொளி)

Qatar receive scattered rain
Pic: @qatarweather

கத்தாரின் பல்வேறு பகுதிகளில் நேற்று (20-02-2021) பிற்பகல் பரவலான மழை பெய்துள்ளதாக கத்தார் வானிலை ஆய்வுத்துறை (QMD) தெரிவித்துள்ளது.

அல் வக்ரா பகுதியில் மிதமான மழையைக் காட்டும் வீடியோவை வானிலை ஆய்வுத்துறை பகிர்ந்தது. அதேபோல் Dukhan நெடுஞ்சாலை மற்றும் தோஹாவின் சில பகுதிகளிலும் லேசான மழை பொழி ஏற்பட்டது.

கத்தாரில் இதுவரை 140,000க்கும் மேற்பட்ட COVID-19 தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது.!

கத்தார் வானிலை ஆய்வுத்துறை முந்தைய ட்வீட்டில், சமீபத்திய ரேடார் படங்கள் நாட்டின் வடக்குப் பகுதிகள் மாறுபட்ட தீவிரத்தின் பரவலான மழை பொழிவை காட்டுகின்றன என தெரிவித்தது.

வானத்தில் மழை மேகங்கள் தொடர்ந்து நகர்ந்து செல்கின்றன என்றும், தயவுசெய்து சில நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்குமாறு கத்தார் வானிலை ஆய்வுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

கத்தார் நாட்டிற்குள் தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகள் கடத்த முயற்சி.!