கத்தாரில் பல இடங்களில் இன்று மிதமான மழை; வானில் தோன்றிய வானவில்.!

Qatar receive scattered rain
Pic: Mohamed Rafic/ Peninsula Reader

கத்தார் வானிலை ஆய்வுத்துறை (QMD) நவம்பர் 26 (வியாழக்கிழமை) முதல் இந்த வாரத்தின் ஆரம்பம் வரை பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கத்தார் நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இன்று (29-11-2020) ஞாயிற்றுக்கிழமை பரவலான மழை பெய்தது.

கத்தாரில் ATM-ல் பணம் எடுக்க கட்டுப்பாடு என்ற தகவல் போலியானது; மத்திய வங்கி.!

கத்தார் வானிலை ஆய்வுத்துறை (QMD) Al Zubarah பகுதியில் பெய்த மழையின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அதன் அதிகாரப்பூர்வ ட்வீட்டரில் பகிர்ந்து கொண்டது.

Al Rayyan பகுதியிலும் இன்று  லேசான மழை பெய்தது. பரவலான மழைக்குப் பிறகு, சல்வா சாலை மற்றும் தி பேர்ல்-கத்தார் பகுதிகளில்  வானவில் தென்பட்டது.

கத்தாரில் நாளை மறுநாள் கட்டாரா பாரம்பரிய தோவ் விழா; ஏற்பாடுகள் தீவிரம்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…