கத்தாரில் கொரோனா வைரஸிற்கு மூன்றாவது நபர் மரணம்.!!

Qatar records third Covid-19 death.

கத்தார் பொது சுகாதார அமைச்சகம் (MoPH) கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்பட்ட மூன்றாவது மரணத்தை நேற்று (02-04-2020) பதிவு செய்துள்ளது.

இறந்தவர், கடுமையான நிமோனியாவால் (Pneumonia) பாதிக்கப்பட்ட 85 வயதான குடியிருப்பாளர் என்றும், அவருக்கு தொற்று கண்டறியப்பட்ட உடனே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் என்றும், உடனடியாக அவருக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ பராமரிப்பு வழங்கப்பட்டது என்றும் MoPH கூறியுள்ளது. மேலும், இறந்தவரின் குடும்பத்திற்கு அமைச்சகம் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளது.

கத்தாரில், வைரஸ் பாதிப்பு ஏற்படும் அபாயத்தை குறைப்பதற்காக சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்புடனும், அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையும் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளையும் கடைப்பிடிக்குமாறு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.