COVID-19: கத்தாரில் இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 15) மேலும் 283 பேர் பாதிப்பு..!

கத்தாரில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 283 புதிய உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்களை பொது சுகாதார (MoPH) அமைச்சகம் ‌இன்று (15-04-2020) பதிவு செய்துள்ளது.

இதுவரை கத்தாரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 3,711ஆக உயர்ந்துள்ளது.

இந்த புதிய சம்பவங்கள், குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களிடையும் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியிலும் பதிவாகியுள்ளன‌ என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த புதிய நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான மருத்துவ சேவையைப் பெற்றுள்ளன என்பதாக தெரிவித்துள்ளது.

பொது சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில், 1,862 பேருக்கு ஆய்வக சோதனைகளை நடத்தியுள்ளதாக கூறியுள்ளது.

மேலும், கத்தாரில் கொரோனா வைரஸ் சந்தேகத்தின் பெயரில், இதுவரை 54,484 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளதாக MoPH தெரிவித்துள்ளது.

Image Source : MoPH