கத்தார் Safari Mall லில் புதிய பார்க்கிங் வசதி திறப்பு..!

Qatar- Safari Mall's expanded parking area opens.

கத்தாரில் அமைந்துள்ள பிரபல “சஃபாரி மாலில்” வருகை தரும் மக்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சஃபாரி குழுமம் வாடிக்கையாளர்களுக்காக புதிதாக விரிவாக்கப்பட்ட பார்க்கிங் பகுதியை திறந்துள்ளது.

இந்த பார்க்கிங் வசதியானது 80,000 சதுரஅடி பரப்பளவில் அமைக்கப்பட்டு
உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது வாடிக்கையாளர்களின் சிரமத்தை நீக்கவே இந்த புதிய வாகன பார்க்கிங் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், இங்கு பெரும் எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் வந்து செல்வதால் சஃபாரி மாலுக்கு செல்லும் சாலைகளில் போக்குவரத்து தடங்கள் ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக, சஃபாரி மால் வாடிக்கையாளர்களுக்காக புதிய விசாலமான பார்க்கிங் பகுதியைத் திறந்துள்ளது.