இந்திய நாட்டின் 72வது குடியரசு தின விழா: கத்தார் அமீர் உள்ளிட்டோர் வாழ்த்து.!

Qatar Send congratulations India

இந்திய நாட்டின் 72வது குடியரசு தின விழா இன்று (26-01-2021) உலகம் எங்கும் உள்ள இந்திய மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்திய நாட்டின் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு, கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் இன்று (26-01-2021) இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் அவர்களிடம் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கத்தாருக்கு நேரடி விமான சேவைகளை தொடங்கியது ஏர் அரேபியா.!

இதேபோல், கத்தார் துணை அமீர் HH ஷேக் அப்துல்லா பின் ஹமாத் அல் தானி அவர்களும் இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் அவர்களிடம் வாழ்த்துக்களைத் அனுப்பினார்.

மேலும், கத்தார் பிரதமரும், உள்துறை அமைச்சருமான ஷேக் காலித் பின் கலீஃபா பின் அப்துல்அஜீஸ் அல் தானி அவர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

கத்தாரில் அல் கோர் கார்னிவல் திருவிழா துவக்கம்; அனைவருக்கும் அனுமதி இலவசம்.!