பிலிப்பைன்ஸில் கோரத்தாண்டவமாடிய வாம்கோ புயல்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வாரி வழங்கிய கத்தார்.!

Qatar sends aid philippines
Pic: QNA

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த நவம்பர் மாதம் ஏற்ப்பட்ட வாம்கோ புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், வீதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர் மற்றும் வீடுகள் உடைமைகளை இழந்தும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கத்தார் நாட்டிற்குள் தடைசெய்யப்பட்ட மாத்திரைகள் கடத்த முயற்சி.!

இதனையடுத்து, பிலிப்பைன்ஸில் ஏற்பட்டுள்ள புயலின் விளைவுகளைத் தணிக்க, கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்களின் உத்தரவையடுத்து, நேற்று (03-12-2020) வியாழக்கிழமை மருத்துவ உதவிகளை அனுப்பியுள்ளது.

இந்த உதவியில், 40 டன் உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்கள் அடங்கும். கூடாரங்கள், தண்ணிர், மின்சார ஜெனரேட்டர்கள் மற்றும் மீட்பு படகுகள் போன்றவைகளும் அனுப்பப்பட்டுள்ளது.

கத்தாரில் உள்ள இந்த மாலில் மிட்நைட் ஷாப்பிங் விழா.!

கத்தார் அபிவிருத்திக்கான நிதியம் (QFFD) மற்றும் அமீரி விமானப்படையின் ஒத்துழைப்புடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நிவாரண உதவிகள் கொண்டு செல்லப்பட்டது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…