கத்தாரில் இதுவரை 1 மில்லியனுக்கு மேல் கொரோனா பரிசோதனை.!

Qatar tests one million people
Image Credits: AFP

கத்தார் பொது சுகாதார அமைச்சகம் (MoPH) வெளியிட்டுள்ள தினசரி புள்ளிவிவரங்களின்படி, COVID-19 தொற்றுநோய் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை கத்தாரில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.

கத்தாரில் நேற்று (05-11-2020) 12,064 பேர் பரிசோதிக்கப்பட்ட நிலையில், நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 1,001,488-ஐ எட்டியுள்ளது.

கத்தாரில் அடுத்த ஆண்டு அக்டோபரில் முதல் பொதுத்தேர்தல்; அமீர் அதிரடி அறிவிப்பு.!

கத்தாரில் இதுவரை கொரோனா தொற்றுக்கு பரிசோதிக்கப்பட்ட மொத்த மக்களின் எண்ணிக்கை அதன் சுமார் 2.75 மில்லியன் மக்கள்தொகையில் இருந்து 37 சதவீதத்தை குறிக்கிறது.

COVID-19 தொற்று தொடங்கியதிலிருந்து கத்தாரில் பதிவான மொத்த நேர்மறை சம்பவங்களின் எண்ணிக்கை 133,619 ஆகும், இது வைரஸால் பரிசோதிக்கப்பட்ட மொத்த மக்களில் 13.34 சதவீதமாகும்.

தற்போதுவரை, கத்தாரில்  செயலில் உள்ள சம்பவங்கள் எண்ணிக்கை 2,707ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். COVID-19 தீவிர சிகிச்சை பிரிவில் 40 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கத்தார் இராணுவ போலீஸ் படைகளின் கட்டளை முகாம் தொடக்க விழா; அமீர் பங்கேற்பு.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…