டோடல் மற்றும் மருபேனியுடன் இணைந்து சோலார் பிளான்ட் அமைக்க கத்தார் திட்டம்…

Qatar to build solar power plant with Total and Marubeni. (image credit : ET energyworld)

சுமார் 800 மெகாவாட் கொள்ளளவு கொண்ட சூரிய (solar) மின்சக்தி திட்டத்தை உருவாக்க பிரான்சின் டோட்டல்(Total) மற்றும் ஜப்பானின் மருபேனி (Marubeni) ஆகிய நிறுவனங்களுடன் கத்தார் ஒப்பந்தம் செய்துள்ளது என்று கத்தாரின் எனர்ஜி மினிஸ்டர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துளார்.

இந்த திட்டத்தின் செலவு சுமார் 1.7 பில்லியன் ரியால்கள் (467 மில்லியன் டாலர்) என்று கத்தார் பெட்ரோலியத்தின் (QP) தலைமை நிர்வாகி Saad al-Kaabi தோஹாவில் ஒரு செய்தி மாநாட்டில் தெரிவித்தார்.

QP மற்றும் கத்தார் மின்சாரம் மற்றும் நீர் நிறுவனத்திற்கு (QEWC) சொந்தமான கத்தாரின் சிராஜ் எனர்ஜி நிறுவனம் சூரிய ஆலையில் 60% பங்குகளை வைத்துள்ளது. மீதமுள்ள 40% பங்குகளை மருபேனி மற்றும் டோடல் நிறுவனங்கள் சொந்தமாகியுள்ளது.

கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கும் மற்றும் சுற்றுச்சூழலில் அதன் தாக்கத்தை குறைப்பதற்கும் உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு (LNG) சப்ளை செய்யும் கத்தார் அதிக சோலார் திட்டங்களைத் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது என்று kaabi தெரிவித்தார்.

அக்டோபரில் kaabi ஒரு carbon capture மற்றும் சேமிப்பு ஆலையை உருவாக்கி 2025 ஆம் ஆண்டளவில் அதன் LNG-லிருந்து 5 மில்லியன் டன் கார்பனை பிரித்தெடுக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது என்றும் கூறினார்.

News Source : Reuters