கத்தாரில் இன்று முதல் அனைத்து கடைகள் மற்றும் வியாபார நடவடிக்கைகளை மூட உத்தரவு.!

Image Credits: Al Arabiya

கத்தாரில், அனைத்து கடைகள் மற்றும் வியாபார நடவடிக்கைகளை இன்று (19-05-2020) முதல் மே 30 வரை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கத்தார் பிரதமரும் உள்துறை அமைச்சருமான H E Sheikh Khalid bin Khalifa bin Abdulaziz Al Thani அவர்களின் தலைமையில், நேற்று (18-05-2020) மாலை வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, இந்த முடிவானது அறிவிக்கப்பட்டுள்ளது.

உணவு மற்றும் கேட்டரிங் கடைகள், மருந்தகங்கள் மற்றும் விநியோக சேவைகளை வழங்கும் உணவகங்களைத் தவிர, அனைத்து கடைகள் மற்றும் வணிக நடவடிக்கைகளையும் மே 19 முதல் மே 30 வரை மூடுவதற்கு அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

மேலும், கத்தார் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அனைவரும் EHTERAZ APP பயன்பாட்டை கட்டாயம் நிறுவ வேண்டும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Source: The Peninsula Qatar