கத்தார் தொலைகாட்சியின் பிரபல ஒளிபரப்பாளர் காலமானார்.!

Qatar TV broadcaster Died

கத்தார் ஊடகங்களின் மிக முக்கியமான நட்சத்திரங்களில் ஒருவரான ஒளிபரப்பாளர் ஜாசிம் முகமது அப்துல்அஸிஸ் நேற்று (01-12-2020) செவ்வாய்க்கிழமை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

இவர், கத்தார் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை வழங்குவதில் பிரபலமானவர்.1983ஆம் ஆண்டு முதல் இவர் பணியாற்றி வந்துள்ளார். இவருடைய “Imrah Warbah” என்ற நிகழ்ச்சி பிரபலமான அரபு நிகழ்ச்சிகளில் ஒன்றாகும்.

கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மூன்று பேர் கைது‌.!

மறைந்த ஒளிபரப்பாளரான ஜாசிம் பல தேசிய நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார், குறிப்பாக தேசிய தின கொண்டாட்டங்களில், The Day of Glory and Pride போன்ற நிகழ்வுகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

ஜாசிம் முகமது அப்துல்அஸிஸ் மறைவுக்கு கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், கத்தார் பிரதமரும் உள்துறை அமைச்சருமான HE ஷேக் காலித் பின் கலீஃபா பின் அப்துல்அஜிஸ் அல் தானி மற்றும் கத்தார் மீடியா கார்ப்பரேஷனின் தலைமை நிர்வாக அதிகாரி HE ஷேக் அப்துல்ரஹ்மான் பின் ஹமாத் அல் தானி உள்ளிட்ட பலர் ஒளிபரப்பாளர் ஜாசிம் மரணத்திற்கு இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

கத்தாரில் அடுத்த கல்வியாண்டில் இரண்டு புதிய இந்திய பள்ளிகள்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…