கத்தார் உடனான உறவை மீட்டெடுக்க அமீரகம் ஒப்புதல்; வர்த்தகம், போக்குவரத்துக்கு விரைவில் அனுமதி.!

Qatar UAE restore ties
Pics: @spagov/@DMO

சவுதி அரேபியாவில் நேற்று முன்தினம் (05-01-2021) நடைபெற்ற 41வது வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் உச்சி மாநாட்டிற்கு பின்னர், ஊடகங்களுக்கு உரையாற்றிய சவுதி வெளியுறவு அமைச்சர் விமானங்களை தொடங்குவது உட்பட கத்தார் நாட்டுடனான உறவை மீட்டெடுக்க நான்கு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் கத்தார் உடனான உறவை முழுமையாக மீட்டெடுக்க ஒப்புக் கொண்டுள்ளன.

கத்தார் உடனான உறவை மீட்டெடுக்க நான்கு நாடுகள் ஒப்புதல்; விரைவில் விமானங்களும் அனுமதி.!

இந்த முடிவின் அடிப்படையில், கத்தார் நாட்டுடன் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக புறக்கணிக்கப்பட்ட வர்த்தகம் மற்றும் போக்குவரத்து ஒரு வாரத்திற்குள் மீண்டும் அனுமதிக்கப்படலாம் என ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சர் Dr. அன்வர் கர்காஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், ஐக்கிய அரபு அமீரகம் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) தலைவர்களின் உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு ஆதரவு அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் மீண்டும் நட்புறவு கொண்ட நாடுகளாக மாறும் என்றும், கத்தார், அமீரகம் இடையே பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மாடர்னா COVID-19 தடுப்பூசியின் முதல் தொகுதி விரைவில் கத்தார் வந்தடையும்.!

வளைகுடா நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தையடுத்து, கத்தார் மற்றும் சவுதி அரேபியா இடையே நில வழி, வான் வழி மற்றும் கடல் வழி எல்லைகள் கடந்த திங்கட்கிழமை (04-01-2021) இரவு முதல் திறக்கப்படும் என குவைத் வெளியுறவு அமைச்சர் முன்னதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

த்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…