இலங்கையில் உள்ள கத்தார் விசா மையம் திறப்பு…முன்பதிவு தொடக்கம்.!

Qatar Visa Center Colombo
Pic: File/The Peninsula

வெளிநாடுகளில் உள்ள கத்தார் விசா மையங்களை மீண்டும் திறப்பதன் ஒரு பகுதியாக, இலங்கை நாட்டின் கொழும்பில் உள்ள கத்தார் விசா மையம் விரைவில் செயல்படும் என உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கொழும்பில் உள்ள கத்தார் விசா மையத்தை வருகின்ற ஜனவரி 20, 2021
அன்று மீண்டும் திறக்க உள்ளதாக கத்தார் உள்துறை அமைச்சகம் (MoI) அறிவித்துள்ளது.

வீட்டு பணியாளர்களின் விசா விண்ணப்பங்களை பெறும் கத்தார் விசா மையம்.!

கொழும்பில் உள்ள கத்தார் விசா மையத்தை பார்வையிட நியமனம் முன்பதிவு இன்று (13-01-2021) முதல் தொடங்கும் என்றும், QVC வலைத்தளம் மூலம் முன்பதிவு செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

2021 ஜனவரி 13ஆம் தேதி முதல் QVC வலைத்தளம் மூலம் கத்தார் விசா மையத்தைப் பார்வையிட நியமனம் முன்பதிவு செய்யலாம் என்று உள்துறை அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கத்தார், எகிப்து இடையேயான வான்வெளி எல்லை மூன்று ஆண்டுக்கு பின் திறப்பு.!

கத்தார் சமீபத்தில் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் உள்ள விசா மையங்களைத் திறந்துள்ளதுடன், பங்களாதேஷ் வீட்டுப் பணியாளர்களுக்கான விசா விண்ணப்பங்களையும் பெறத் தொடங்கியுள்ளது.

த்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…