கத்தார் அமீருக்கு ஜோர்டானில் உத்தியோகபூர்வ வரவேற்பு.!

மூன்று நாடுகளின் சுற்றுப்பயணத்தின் முதல் பயணமாக, அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி ஜோர்டான் நாட்டிற்கு பிப்ரவரி 23‌ ஆம் தேதியன்று சென்றடைந்தார். ஜோர்டானின் மன்னர் அப்துல்லா II பின் அல் ஹுசைன், அமீர் மற்றும் அவருடன் சென்ற தூதுக்குழுவை ராணி ஆலியா சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றார்.

அமீருக்கு விமான நிலையத்தில் ஒரு உத்தியோகபூர்வ வரவேற்பு விழா வழங்கப்பட்டது, அதில் 21 பீரங்கி சூடும், கத்தார் மற்றும் ஜோர்டானின் தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன. இளவரசர் பைசல் பின் அல்-ஹுசைன், மன்னரின் ஆலோசகரும், தேசிய கொள்கைகள் குழுவின் தலைவருமான இளவரசர் அலி பின் அல் ஹுசைன், ஜோர்டான் கால்பந்து சங்கத்தின் தலைவர் இளவரசர் ஹாஷிம் பின் அல்-ஹுசைன், தலைமை ராயல் கவுன்சிலர் மற்றும் இந்த நிகழ்வில் இளவரசர்கள் மற்றும் வேறு சில உயர் அதிகாரிகள் மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

பின்னர், அமீரும் ஜோர்டானிய மன்னரும் அம்மானில் உள்ள அல் ஹுசைனியா அரண்மனையில் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையை நடத்தினர். சமீபத்திய பிராந்திய முன்னேற்றங்களை மறுஆய்வு செய்வதோடு இருதரப்பு உறவுகள் மற்றும் அவற்றை ஒருங்கிணைப்பதற்கான வழிகள் குறித்தும் இந்த அமர்வில் கவனம் செலுத்தப்பட்டது.

அமீர் மற்றும் மன்னர் அப்துல்லா இரு சகோதர நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் திருப்திகரமான வளர்ச்சியை ஒப்புக் கொண்டதுடன், அவற்றை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்கும், குறிப்பாக பொருளாதாரம் மற்றும் முதலீடுகளில் கவனம் செலுத்துவற்கும் உறுதியளித்தனர்.

கத்தார்-ஜோர்டானிய உச்ச கூட்டுக் குழுவைச் செயல்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், எரிசக்தி, உள்கட்டமைப்பு மற்றும் உயர்கல்வி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் இரு தலைவர்களும் சுட்டிக் காட்டினர்.

2022 ஃபிஃபா உலகக் கோப்பைக்காக கத்தார் தயாராவதற்கு இடையே ஜோர்டான் பல்கலைக்கழகம் லுசைல் பல்கலைக்கழகத்தின் கீழ் கல்விப் படிப்புகளை வழங்குவதாக நிபுணத்துவ பரிமாற்றத்துடன் இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டதுடன் இது விரைவில் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.

அமீரின் உத்தரவுப்படி, ஜோர்டானிய நாட்டினருக்கு கத்தார் குறைந்தது 10,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் இந்த நோக்கத்திற்காக ஒரு நிறுவனமும் உருவாக்கப்படும் என்றும் இந்த முடிவு ஆகஸ்ட் 2018 இல் அறிவிக்கப்பட்ட 10,000 வேலை வாய்ப்புகளை நிறைவு செய்வதாகும் மேலும், ஜோர்டானின் இராணுவ ஓய்வூதிய நிதியதிற்கு கத்தார் 30 மில்லியன் மானியத்தை வழங்குகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.