கத்தார் பண்ணைகளின் தயாரிப்புகளுக்கான புதிய விழா தொடக்கம்

Qatari farms Products Festival
Pic: MME

கத்தாரில் நேற்று (19-11-2020) வியாழக்கிழமை Gharafa பகுதியில் அமைந்துள்ள Lulu ஹைப்பர் மார்க்கெட்டில் கத்தார் பண்ணைகளின் தயாரிப்புகளுக்கான புதிய விழாவை நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் துவங்கியுள்ளது.

இந்த ஆண்டு நடைபெறும் விழாவில், 150 பண்ணைகள் பங்கேற்றுள்ளதாக அமைச்சகத்தின் உணவு பாதுகாப்புத் துறை இயக்குநர் Masoud Jarallah Al Marri தெரிவித்துள்ளார்.

கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மூன்று பேர் கைது‌.!

ஒவ்வொரு ஆண்டும் விவசாய பருவத்தின் தொடக்கத்தில் நடைபெறும் இந்த விழா தேசிய தயாரிப்புகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் கூறினார்.

விவசாயிகள் தங்கள் பொருட்களின் தரத்தை மேம்படுத்த ஊக்குவிக்கும் வகையில் அமைச்சகம் பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாக உணவு பாதுகாப்புத் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மேலும், கத்தாரின் விவசாய விளைபொருள்கள் 92 ஆயிரம் டன்களை எட்டியுள்ளது என்றும், 2023ஆம் ஆண்டுக்குள் சந்தை தேவைகளில் 70 சதவீதம் உள்நாட்டில் உற்பத்தி செய்வதே அமைச்சகத்தின் நோக்கம் என்றும் Masoud Jarallah Al Marri கூறியுள்ளார்.

கத்தாரில் இந்த வார இறுதியில் வெப்பநிலை குறையும்; வானிலை ஆய்வுத்துறை.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…