கத்தார் QDB தனியார் நிறுவனங்களை ஆதரிக்க தேசிய உத்தரவாத திட்டம் அறிமுகம்.!

QDB launches National Guarantee Program to support private sector.

கத்தார் அபிவிருத்தி வங்கி (QDB‌) தனியார் நிறுவனங்களை ஆதரிப்பதற்காக தேசிய உத்தரவாத திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. உள்ளூர் வங்கிகளுக்கு உத்தரவாதங்களை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட தேசிய உத்தரவாத திட்டத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த உத்தரவாதங்களின் கீழ், உள்ளூர் வங்கிகளால் COVID-19 இனால் பாதிக்கப்பட்டுள்ள தனியார் நிறுவனங்களுக்கு வட்டி இல்லாத கடன்களை வழங்க முடியும்.

மேலும், நிதி அமைச்சகம் மற்றும் கத்தார் மத்திய வங்கி (QCB) மற்றும் நாட்டில் செயல்படும் அனைத்து வங்கிகளின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்பதாக கூறியுள்ளது.

தேசிய உத்தரவாத திட்டத்தின் நோக்கம் தனியார் துறையில் உள்ள நிறுவனங்களின் சம்பளம் மற்றும் வாடகைக்கு ஆதரவளிப்பதாகும். மேலும், இதனுடன் தொடர்புடைய வழிகாட்டுதல்கள் QDB ஆல் நிர்வகிக்கப்பட்டு வழங்கப்படும். கத்தாரில் இயங்கும் பிற உள்ளூர் வங்கிகள் QDB இன் உத்தரவாதத்தின் அடிப்படையில் நிதியுதவி வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.