கத்தாரில் இந்த வார வானிலை நிலவரம்.!

Qmd weekend Weather Report
Pic: The Peninsula Qatar

கத்தார் வானிலை ஆய்வுத்துறை (QMD) வார இறுதிக்கான அதன் வானிலை அறிக்கையில், முதலில் மூடுபனி முதல் பனிமூட்டமான வானிலை நிலவும் என்றும், அதனைத் தொடர்ந்து சில மேகங்களுடன் சூடான பகல்நேரமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், பரவலான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும், இது இடியுடன் கூடியதாக இருக்கலாம் என்றும், சில நேரங்களில் தூசி காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கூறியுள்ளது.

லெபனானுக்கு இரண்டு கள மருத்துவமனைகளை அனுப்பி வைத்தது கத்தார்..!

இரண்டு நாட்களிலும், முதலில் குறைந்த தெரிவுநிலை மற்றும் வலுவான காற்றுடன் இடியுடன் கூடிய மழை பற்றி வானிலை ஆய்வுத்துறை எச்சரித்துள்ளது.

கத்தாரில் இன்று மற்றும் நாளை குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலை முறையே 23 டிகிரி செல்சியஸ் முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை மாறுபடும்.

இடியுடன் கூடிய மழைக்கான கடல் எச்சரிக்கையையும் வானிலை ஆய்வுத்துறை வெளியிட்டுள்ளது. இது வெள்ளிக்கிழமை தொடங்கி சனிக்கிழமை அதிகாலை வரை தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் அனைத்து குடியிருப்பாளர்களும், குடிமக்களும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், அனைத்து கடல் நடவடிக்கைகளையும் தவிர்க்க வேண்டும் என்றும் QMD கேட்டுக்கொண்டுள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…