கத்தார் தேசிய தினம்: இந்த அருங்காட்சியகத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு.!

QND Special Events
Pic: Gulf-Times

கத்தாரில் அமைந்துள்ள ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி (FBQ) அருங்காட்சியகம் கத்தார் தேசிய தினத்திற்கான சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய  திட்டமிட்டுள்ளதாக நேற்று முன்தினம் (10-12-2020) அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், பார்வையாளர்கள் நாட்டின் வரலாற்றைப் பற்றியும் மற்றும் கடந்த காலத்திலிருந்து இன்று வரையிலான கத்தார் மக்களின் வளமான கலாச்சாரம் பற்றிய அற்புதமான தொகுப்புகள், அரிய கலைப்பொருட்கள் மற்றும் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட கலைத் துண்டுகள் மூலம் கத்தார் வரலாற்றைப் பற்றிய கதைகளை பார்வையாளர்கள் அறிந்து கொள்ளலாம்.

கத்தார் தேசிய தினம்: கடைகளில் களைகட்டும் பொருட்களின் விற்பனை.!

கத்தார் பாரம்பரிய பிரிவு சுற்றுப்பயணம் வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி (பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை) மற்றும் டிசம்பர் 19ஆம் தேதி (காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை, பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை) நடைபெற உள்ளது என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரபு கைரேகை உள்ள நினைவு பரிசுகளைப் பெறுவதற்கும் மற்றும் பாரம்பரிய கத்தார் மஜ்லிஸ் அமைப்பில் புகைப்படங்கள் எடுப்பதற்கும் வழக்கமான அருங்காட்சியக நேரங்களில் வாய்ப்புகள் உள்ளன.

மேலும், கத்தார் கலை கண்காட்சியை டிசம்பர் 18 முதல் ஜனவரி 2, 2021 வரை The White மஜ்லிஸில் வைக்க திட்டமிட்டுள்ளது.

கத்தாரில் இந்த வார இறுதியில் குளிர் காலநிலை தொடரும்.!

Pic: Instagram/FBQ Museum

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…