கத்தார் தேசிய தினம்: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு.!

QND vehicles conditions
Pic: Gulf-Times

கத்தார் நாட்டில் நாளை மறுநாள் டிசம்பர் 18ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தேசிய தினம் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கின்றது.

இந்நிலையில், டிசம்பர் 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை கத்தார் தேசிய தின கொண்டாட்டங்களை முன்னிட்டு, கார்களுக்குப் பயன்படுத்தப்படும் அலங்காரங்களை ஒழுங்குபடுத்தும் விதிகளை போக்குவரத்துத் துறை பட்டியலிட்டுள்ளது.

கத்தார் தேசிய தினம்: வான வேடிக்கைகளை நீங்கள் எங்கு சென்று காணலாம்.?

கத்தார் தேசிய தினத்திற்கான வாகனங்களின் நிறத்தை மாற்ற கூடாது என்றும், வாகனங்களின் (windshield) விண்ட்ஷீல்டில் நிறத்தை மாற்ற கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வாகனத்தில் நான்கு நபர்களுக்கு மேல் பயணிக்க கூடாது, இந்த விதியிலிருந்து குடும்பங்களுக்கு விலக்கு அளிக்கப்படுள்ளது.

கார்களுக்கு பயன்படுத்தப்படும் அலங்காரங்கள் முன்புறம் மற்றும் பின்புறத்தில் உள்ள நம்பர் பிளேட்டுகளை மறைக்கக்கூடாது மற்றும் அனைத்து பயணிகளும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் தேசிய தினம்: விடுமுறை நாட்களை அறிவித்தது அமிரி திவான்.!

மேலும், தோஹா கார்னிச்யில் தேசிய தின அணிவகுப்புக்காக அழைக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் மற்றும் குடிமக்கள் மட்டும் கலந்து கொள்ள முடியும் என்று தேசிய தின ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…