வீட்டு பணியாளர்களின் விசா விண்ணப்பங்களை பெறும் கத்தார் விசா மையம்.!

QVC receive visa applications
Pic: QVC

பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு வேலை நோக்கத்திற்காக நுழைவு விசா விண்ணப்பங்களைப் பெறுவதற்கான வழிமுறை இன்று (06-01-2021) முதல் பங்களாதேஷில் உள்ள கத்தார் விசா மையத்திற்கு (QVC) மாற்றப்படும் என கத்தார் உள்துறை அமைச்சகத்தின் விசா ஆதரவு சேவைகள் துறை நேற்று (05-01-2021) அறிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள கத்தார் விசா மையம் விரைவில் திறக்கப்படும் – MoI மூத்த அதிகாரி.!

வெளிநாடுகளில் உள்ள கத்தார் விசா மையங்கள் வழியாக வீட்டுத் தொழிலாளர்கள் மற்றும் இதேபோன்ற அந்தஸ்தைப் பெறுபவர்களைப் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான அதன் முயற்சியின் கட்டமைப்பிற்குள் இது வந்துள்ளதாக கத்தார் உள்துறை அமைச்சகத்தின் விசா ஆதரவு சேவைகள் துறை தெரிவித்துள்ளது.

மேலும், வெளிநாடுகளில் உள்ள கத்தார் விசா மையங்களை மீண்டும் திறப்பதன் ஒரு பகுதியாக, பங்களாதேஷில் உள்ள Dhaka விசா மையம் கடந்த மாதம் டிசம்பர் 30ம் தேதி முதல் செயல்படும்‌ என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சவுதியில் நடைபெற்ற 41வது GCC உச்சி மாநாட்டின் இறுதி அறிக்கை.!

த்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…