கத்தார் ஏர்வேஸ் விமானம் மூலம் 389 இலங்கையர்கள் தாயகம் சென்றடைந்தனர்.!

Repatriation of the Third Group of Sri Lankans from Doha
Pic: SriLanka Embassy in Qatar

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்ட சர்வதேச விமானப் போக்குவரத்துத் தடையின் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இலங்கையர்களை மீண்டும் தாயகத்திற்கே அழைத்து செல்லும் திருப்பி அனுப்பும் நடவடிக்கையை இலங்கை அரசானது தற்பொழுது மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில், கத்தார் நாட்டில் சிக்கித் தவித்த 389 இலங்கையர்களை கொண்ட மூன்றாம் குழு நேற்று முன்தினம் (18-08-2020) கத்தார் ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கத்தார் ஏர்வேஸ் விமானம்‌ மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளதாக கத்தாரில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

Repatriation of the Third Group of Sri Lankans
Pic: Srilanka Embassy in Qatar

இதையும் படிங்க: கத்தார் ஏர்வேஸ் சென்னை உட்பட இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு விமான சேவைகளை தொடக்கம்.!

இந்த விமானத்தில் பயணம் மேற்கொண்ட பயணிகளில் பெரும்பாலோனோர் கத்தார் நாட்டில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கத்தாரில் இருந்து வந்த இலங்கையர்கள் அனைவரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அடைந்ததும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு PCR சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கடும் வெயிலில் தண்ணீர் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள்; MoPH ட்வீட்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?Facebook https://www.facebook.com/tamilmicsetqatar

?Twitter
https://twitter.com/qatartms

?Instagram  https://www.instagram.com/qatartms/