கத்தாரில் உள்ள பிரபல சஃபாரி மால் மீண்டும் திறப்பு.!

Safari Mall resumes operations
Pic: Safari Mall

கத்தாரில் அதிகரித்து வரும் COVID-19 சம்பவங்கள் மத்தியில், கூட்டம் அதிகமாக இருக்கும் காரணத்தால் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் Abu Hamour பகுதியில் உள்ள சஃபாரி மாலை தற்காலிகமாக மூடியிருந்தது.

இந்நிலையில்,  சஃபாரி மால் நேற்று (17-02-2021) புதன்கிழமை முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக சஃபாரி ஹைப்பர் மார்க்கெட் அதன் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளது.

கத்தாரில் 47 நிறுவனங்கள் தொழிலாளர் அமைச்சகம் அதிரடி நடவடிக்கை.!

சஃபாரி மாலின் COVID-19 பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வாடிக்கையாளர்கள் எந்தவித அச்சமும் இன்றி அனைத்து சஃபாரி விற்பனை நிலையங்களிலிருந்தும் பொருட்களை தொடர்ந்து வாங்க முடியும் என்றும், மேலும் அனைவரின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுக்கு சஃபாரி மால்  நிர்வாகம் நன்றியை தெரிவித்துள்ளது.

மேலும், பொது மக்களுக்கான பிரபலமான ஷாப்பிங் இடமான சஃபாரி எப்போதும் தனது வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையிலும், பல சலுகைகளையும் வழங்குகிறது என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா விதிமீறல்: கத்தாரில் மேலும் இரண்டு வணிகங்களை இழுத்து மூடியது அமைச்சகம்.!