சவுதி, கத்தார் இடையே நேரடி விமானங்கள்; முன்பதிவை தொடங்கியது சவுதி ஏர்லைன்ஸ்.!

Saudi Airlines starts booking
Pic: Airbus

கத்தார் மற்றும் சவுதி அரேபியா இடையே நில வழி, வான் வழி மற்றும் கடல் வழி எல்லைகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, Abu Samra எல்லையில் இருந்து வரும் அனைத்து வருகையாளர்களுக்கு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட உள்ளது.

இதனையடுத்து, சவுதி அரேபியா விமான நிறுவனம் (Saudia) ரியாத் மற்றும் ஜித்தாவிலிருந்து கத்தார் தலைநகர் தோஹாவுக்கு விமானங்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

கத்தார், சவுதி இடையே நேரடி விமானங்கள்; முன்பதிவை தொடங்கியது கத்தார் ஏர்வேஸ்..!

மேலும், வாரந்தோறும் ரியாத்திலிருந்து 4 விமானங்களும் மற்றும் ஜித்தாவிலிருந்து 3 விமானங்களும் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இந்த விமானம் நாளை (11-01-2021) திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி 16:40 மணிக்கு ரியாத்திலிருந்து புறப்பட்டு ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் எந்த நிறுத்தமும் இல்லாமல் தோஹாவிற்கு 18:05 மணிக்கு வந்தடையும் என விமான நிறுவனம் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், கத்தார் ஏர்வேஸ் நிறுவனமும் நாளை முதல் தோஹாவிலிருந்து ரியாத்துக்கு செல்லும் விமானத்திற்கான முன்பதிவை தொடங்கியுள்ளது.

2017ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட தடைக்கு பின்னர், ரியாத்திலிருந்து தோஹாவுக்கு வரும் முதல் விமானம் இதுவாகும்.

கத்தாரில் களைகட்டும் அறுவடை திருவிழா; புதிய இடத்திலும் தொடக்கம்..!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…