ஈத் அல் அத்ஹா 2020: சவுதியில் பொது மற்றும் தனியார் துறைகளுக்கு விடுமுறை நாட்கள் அறிவிப்பு.!

Pic: Zawya.com

இஸ்லாமிய மாதங்களில் ஒன்றான துல் ஹஜ் மாதத்தின் 10ஆம் நாளில் ஈத் அல் அத்ஹா (Eid Al-Adha) எனப்படும் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுவது வழக்கம். தற்பொழுது இந்த வருடத்தில் வருகின்ற ஜூலை 31ஆம் தேதி ஈத் அல் அத்ஹா கொண்டாடப்பட இருப்பதாக வளைகுடா நாடுகள் தெரிவித்துள்ளன.

இந்த ஈத் அல் அத்ஹா எனப்படும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு, சவுதி மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் பொது மற்றும் தனியார் துறைக்கான விடுமுறை நாட்களை அறிவித்துள்ளது.

அதன்படி, பொதுத்துறை ஊழியர்களுக்கு வருகின்ற ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 8 வரை இரண்டு வாரங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் மேலும், தனியார் துறை ஊழியர்களுக்கு ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.