சவுதியில் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி.!

Saudi Covid19 Free VaccineSaudi Covid19 Free Vaccine
Pic: AFP

சவுதி அரேபியாவில் உள்ள அனைத்து குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களும் கொரோனா வைரஸ் (COVID-19) தடுப்பூசி இலவசமாகக் கிடைக்கும் என சவுதி அரேபியாவின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் அடுத்த ஆண்டு இறுதிக்குள், கொரோனா தடுப்பூசிகள் நாட்டின் மக்கள் தொகையில், 70 சதவீதத்தினருக்கு கிடைக்கும் என்று சவுதி சுகாதார அமைச்சகம் எதிர்பார்க்கின்றது.

இந்தியாவில் உள்ள கத்தார் விசா மையங்கள் டிசம்பரில் மீண்டும் திறப்பு.!

கொரோனா தொற்றுக்கு நேர்மறை சோதனை செய்யாதவர்களுக்கு வருகின்ற மாதங்களில், தடுப்பூசி பிரச்சாரத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என சுகாதார அமைச்சின் உதவி துணை செயலாளர் Dr.Abdullah Asiri தெரிவித்துள்ளார்.

மேலும், சவுதி அரேபியா கோவாக்ஸ் வசதி மூலமாகவும், கூட்டமைப்பிற்கு வெளியே உள்ள நிறுவனங்கள் மூலமாகவும் தடுப்பூசிகளைப் பெறும் என்றும், தடுப்பூசி விநியோகத்திற்கான ஒரு விரிவான திட்டமும் வரும் வாரங்களில் தயாராக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

கத்தாரில் 10வது கட்டாரா பாரம்பரிய தோவ் (கப்பல்) விழா டிசம்பரில் தொடக்கம்.!