கத்தாரில் உள்ள சவுதி தூதரகம் விரைவில் திறக்கப்படும்; சவுதி வெளியுறவு அமைச்சர்.!

Saudi reopen Qatar embassy
Pic: REUTERS

அரபு நாடுகளுக்கிடையேயான மூன்று ஆண்டுகால சர்ச்சை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, வளைகுடா தலைவர்கள் அல்-உலா ஒற்றுமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, சவுதி வெளியுறவு அமைச்சர் இன்று (16-01-2021) கத்தாரில் உள்ள தனது தூதரகத்தை மீண்டும் திறக்க சவுதி எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

தூதரகம் மீண்டும் திறக்கப்படுவது குறித்து ரியாத்தில் உள்ள பத்திரிகையாளர்களிடம் சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹான் அவர்கள் கூறுகையில், இது தளவாடங்களுக்கான (logistics) ஒரு விஷயம் என்றும், முழு இராஜதந்திர உறவுகள் மீண்டும் தொடங்கும் என்றார்.

கத்தார் – சவுதி எல்லை திறந்த மூன்றே நாளில் இத்தனை வாகனங்கள்…அடேங்கப்பா.!

கத்தார் ஏர்வேஸ் மற்றும் சவுதி விமான நிறுவனங்கள் இரு நாடுகளுக்கும் இடையே விமான சேவையைத் மீண்டும் தொடங்கியுள்ளது.

மேலும், கத்தார், சவுதி அரேபியா இடையே உள்ள Abu Samra எல்லை மீண்டும் திறக்கப்பட்ட மூன்று நாட்களில் சுமார் 930 வாகனங்கள் கடந்து சென்றதுள்ளதாக கத்தார் சுங்கம் அறிவித்தது.

கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 4 பேர் கைது‌.!