சவுதிக்குள் நுழைந்த கத்தார் வாகனங்கள்: ரோஜாக்களுடன் வரவேற்ற அதிகாரிகள்.‌!

Saudi Salwa Port Customs
Pic: Saudi Customs

கத்தார், சவுதி அரேபியா இடையே உள்ள Abu Samra எல்லை வழியாக முதல் கத்தார் வாகனம் நேற்று (09-01-2021) சவுதி அரேபியாவுக்குள் நுழைந்துள்ளது என சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.

சவுதி அல்-அக்பரியா (Al-Akhbariya) சேனல் கத்தாரில் இருந்து சவுதி அரேபியாவுக்குள்
ஒரு கார் நுழைவதைக் காட்டும் காணொளியை வெளியிட்டது. இதனை சவுதி அதிகாரிகள் பலர் வரவேற்றுள்ளனர்.

சவுதி, கத்தார் இடையே நேரடி விமானங்கள்; முன்பதிவை தொடங்கியது சவுதி ஏர்லைன்ஸ்.!

இந்நிலையில், சவுதி அரேபியாவின் சால்வா  (Salwa) எல்லையில் உள்ள சவுதி சுங்க அதிகாரிகள் சவுதி அரேபியாவிற்குள் வாகனத்தில் வருகை தரும் கத்தார் நாட்டவர்களை வரவேற்றனர்.

சவுதிக்குள் வருகைதரும் கத்தார் நாட்டவர்களை சவுதி சுங்க அதிகாரிகள்
ரோஜா பூக்கள் வழங்கி வரவேற்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

சவுதி அரேபியா மற்றும் கத்தார் இடையே நில வழி, வான் வழி மற்றும் கடல் வழி எல்லைகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து,
சவுதி சுங்கம் தங்கள் பணிகளை செய்ய தொடங்கியுள்ளது.

சல்வா துறைமுகத்தை அனைத்து தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு அம்சங்களுடன், அனைத்து அரசு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், அனைத்து பயணிகளுக்கும் சிறப்பான சே

வைகளை வழங்குவதற்கான அனைத்து தேவைகளையும் துறைமுகம் பூர்த்தி செய்கிறது என அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு பின் முதல் கத்தார் வாகனம் சவுதிக்குள் நுழைந்தது.! (காணொளி)

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…