கத்தார் Al Jumailia-வில் நேற்று மணல் புயலுடன் கூடிய மழை..!!

Scattered rain in northern parts of Qatar
Pic: The Peninsula Qatar

கத்தார் வானிலை ஆய்வுத்துறை அதன் வார இறுதி அறிக்கையில், நேற்று (05-09-2020) சனிக்கிழமை பரவலான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக முன்பு அறிவித்திருந்தது.

இந்நிலையில், கத்தாரில் சில இடங்களில் நேற்று பரவலான மழை, தூசி நிறைந்த நிலை மற்றும் குறைந்த தெரிவுநிலை காணப்பட்டது.

இதையும் படிங்க: கத்தாரில் NOC இல்லாமல் வேலைகளை மாற்றுவது எப்படி.? நடைமுறைகள் வெளியீடு.!!

மேலும், நேற்று பிற்பகல் Al Jumailiya பகுதியில் அதிகபட்சமாக 44.5 மி.மீ மழை பெய்துள்ளதாகவும், மழைக்கு முன்னதாக மணல் புயல் ஏற்பட்டதாகவும் வானிலை ஆய்வுத்துறை ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வுத்துறை குறிப்பிட்டுள்ளது.

கத்தாரில் இன்றைய (06-09-2020) நிலவரப்படி, வானிலையானது பகலில் வெப்பமாக இருக்கும் என்றும், மேகங்களுடன் சில நேரங்களில், லேசான தூசி நிறைந்து எதிர்பார்க்கப்படுவதாகவும், இது இரவில் ஒப்பீட்டளவில் ஈரப்பதமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

Qatar Weather: Rain with Sandstorm ?️The weather was scary but awesome at the same time, near Al Jumailia Qatar. Start…

Posted by Qatar Day on Saturday, September 5, 2020

கத்தார் Al-Jumayliyah பகுதியில் நேற்று மணல் புயலுடன் கூடிய மழை பொழிவை Qatar Day செய்தி நிறுவனம் முகநூலில் பதிவிட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் 30 சதவீத திறனுடன் கப்பல்களை இயக்க அனுமதி..!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook

 Twitter

 Instagram

 Telegram