கத்தார் தோஹாவில் உள்ள இந்த தெரு ஆறு மாதங்களுக்கு மூடல்.!

Six month partial closure
Pic: Ashghal

கத்தார் பொதுப்பணி ஆணையம் (Ashghal) Al Koot Fort சந்திப்புக்கும், அலி பின் அப்துல்லா சந்திப்புக்கும் இடையில் உள்ள அலி பின் அப்துல்லா தெரு (Ali Bin Abdullah Street) 250 மீட்டர் தூரத்திற்கு பகுதி அளவில் மூடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த மூடலானது, வருகின்ற (13-12-2020) ஞாயிற்றுக்கிழமை முதல் ஆறு மாதங்களுக்கு செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலி நாட்டிற்கு மருத்துவ உதவிகளை வழங்கிய கத்தார்.!

ஒவ்வொரு திசையிலும் ஒரு பாதை மூடப்படும் என்றும், அதே சமயத்தில் ஒரு பாதை திறந்திருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அலி பின் அப்துல்லா தெருவில் விரிவாக்க மற்றும் மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள, தோஹா மத்திய வளர்ச்சி மற்றும் அழகுபடுத்தும் திட்டத்திற்குள், பொது போக்குவரத்து இயக்குநரகம் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.

வாகன ஓட்டிகளுக்கு இந்த மூடல் குறித்த அறிவிப்பு பலகை சாலையில் வைக்கப்படும் என பொதுப்பணி ஆணையம் தெரிவித்துள்ளது.

கத்தாரில் முகக்கவசம் அணியாத 111 பேர் மீது நடவடிக்கை.!

மேலும், அனைத்து சாலை பயனர்களும் வேக வரம்பைக் கடைப்பிடிக்குமாறு கத்தார் பொதுப்பணி ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…