கத்தாரில் இருந்து இலங்கைக்கு மேலும் ஒரு சிறப்பு விமானம் அறிவிப்பு..!

SLCC and SLCBF Arrange special flight on Qatar To Srilanka
Pic: Srilankan Airlines

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்ட சர்வதேச விமானப் போக்குவரத்துத் தடையின் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இலங்கையர்களை மீண்டும் தாயகத்திற்கே அழைத்து செல்லும் திருப்பி அனுப்பும் நடவடிக்கையை இலங்கை அரசானது தற்பொழுது மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில், இலங்கைக்கு பயணிக்க விரும்புவர்களுக்காக SLCC மற்றும் SLCBF
ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உடன் இணைந்து இலங்கைக்கு ஒரு விமானத்தை ஏற்பாடு செய்துள்ளது.

கத்தாரில் இருந்து இலங்கைக்கு செல்லும் இந்த விமானம் மூலம் பயணிக்க மொத்த செலவு கீழ்க்கண்டவற்றை உள்ளடக்கியிருக்கும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • விமான பயண சீட்டு.
  • இலங்கையில் 2 PCR பரிசோதனைகள்.
  •  விமான நிலையத்திலிருந்து ஹோட்டலுக்கான போக்குவரத்து.
  • உணவு வசதிகளுடன் 14 நாட்கள் ஹோட்டல்.

மேலும், கட்டணங்கள் நேரடியாக ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கே செலுத்தப்படவேண்டும் என்றும், பயண செலவுகள் தனி அறை அல்லது பகிரப்பட்ட அறை மற்றும் வயது வந்தோர், குழந்தைகள் அல்லது கைக்குழந்தைகள் என்பவற்றை பொறுத்து மாறுபடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தோராயமான கட்டண விவரம்:

• Single room QAR 5750
• Sharing room QAR 4300 per person (Double / triple room)
• Child 05 to 12 years QAR 3140
• Child 02 to 05 years QAR 1820
• Child below 02 years QAR 680

பதிவு மற்றும் விவரங்களுக்கு 70657203 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொள்ளவும்.

கத்தார் செய்திகளை உடனுக்குடன்  தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

 Facebook

Twitter

Instagram