கத்தாரில் இந்த வார இறுதியில் வெப்பநிலை லேசாக குறையும்; QMD ட்வீட்.!

Slight drop in temperature expected during weekend
Pic: Qatar Weather

கத்தார் வானிலை ஆய்வுத்துறை (QMD) வார இறுதியில் அதன் முன்னறிவிப்பில், நாடு முழுவதும் புதிய வடமேற்கு காற்று காரணமாக வெப்பநிலை இந்த வார இறுதியில் 3-4 டிகிரி செல்சியஸ் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

கத்தாரில் பகல் மற்றும் மாலை நேரங்களில் சில மேகங்களுடன் வெப்பமான வானிலை நிலவரத்தை வானிலை ஆய்வுத்துறை கணித்துள்ளது.

குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு கடல் மற்றும் கடலோர பகுதிகளில் வலுவான காற்று மற்றும் உயர் கடல் மட்டம் பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க: கத்தார் நாட்டிற்குள் கடத்த முயன்ற 1500 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்..!

மேலும், வெப்பநிலையானது அதிகபட்சமாக 32-36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் குறைந்தபட்சம் 23-27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும், இது இந்த காலகட்டத்தில் சாதாரண வரம்பு என்றும் QMD குறிப்பிட்டுள்ளது.

கத்தாரில் நாளை (10-10-2020) கடலோர பகுதிகளில் காற்று வடமேற்கு திசையிலிருந்து வடகிழக்கை நோக்கி 5-15 கிலோமீட்டர் வேகத்திலும், கடற்பகுதியில் வடமேற்கில் 10-20 கிலோமீட்டர் வேகத்திலும் வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வெளிநாட்டினர்கள் அதிகமான இடங்களில் சொத்துக்களை வைத்திருக்கலாம் – கத்தார் அரசு அனுமதி.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…