கத்தார் நாட்டிற்குள் தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகள் கடத்த முயற்சி.!

smuggle banned pills
Pic: Qatar Customs

கத்தார் நாட்டிற்குள் தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகள் கடத்தும் முயற்சியை ஏர் கார்கோ மற்றும் தனியார் விமான நிலைய சுங்கத்துறை முறியடித்தது.

இதுகுறித்து கத்தார் சுங்கம் அதிகாரப்பூர்வ ட்விட்டரில், கத்தார் நாட்டிற்குள் கடத்த முயன்ற
50 Captagon மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

கத்தாரில் உள்ள பிரபல சஃபாரி மால் மீண்டும் திறப்பு.!

தபால் அனுப்பும் துறையின் (Express Mail Customs) ஊழியர் ஒருவரின் பார்சலில் அதிகாரிகள் சந்தேகிக்கப்பட்டதையடுத்து, அந்த பார்சலில் உள்ள மருந்து பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்கம் கூறியுள்ளது.

சட்டவிரோதமான பொருட்களை நாட்டிற்கு கொண்டு செல்வதற்கு எதிராக அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும், சுங்க அதிகாரிகள் சமீபத்திய சாதனங்களைக் கொண்டு செயல்படுகிறார் என்றும், கடத்தல்களை சமாளிக்க அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் COVID-19 PCR பரிசோதனை செய்ய அங்கீகரிக்கப்பட்ட மையங்களின் புதுப்பிப்பு பட்டியல்.!