கத்தாரில் தெரு நாய்களின் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும்; அமைச்சகம்.!

Solution stray dogs qatar
Pic: File/The peninsula

கத்தாரில் தெரு நாய்கள் தொடர்பான புகார்களை நிர்வகிக்கும் முயற்சியில், ஒரு சிறப்பு குழு உள்ளதாக நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் (MME) தெரிவித்துள்ளது.

கடந்த வாரங்களில் தெரு நாய்களுக்கு எதிரான புகார்கள் அதிகரித்துள்ளது என நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறியுள்ளது.

கத்தாரில் உள்ள இந்த இரண்டு பெட்ரோல் நிலையங்கள் தற்காலிகமாக மூடல்.!

சர்வதேச தரத்திற்கு ஏற்ப தற்போது தெரு நாய்களைக் கையாள்வதற்கு ஒரு சிறப்பு நிறுவனத்தை நியமிக்கும் நடைமுறைகளை அமைச்சகம் நிறைவு செய்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் தற்போது தெரு நாய்கள் மற்றும் விலங்குகளுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கான ஒரு மையத்தைத் தயாரித்து ஆயத்தப்படுத்தி வருகிறது, இது விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கத்தாரில் மோசமான வானிலை: அல் கோர் கார்னிவல் திருவிழா ஒத்திவைப்பு.!