கத்தார் இந்திய தூதரகத்தில் சிறப்பு முகாம் ஏற்பாடு..!

Special Consular camp being organized in Indian Embassy
Pic: India Embassy in Qatar

கத்தார் இந்திய தூதரகத்தில், வருகின்ற 12-09-2020 சனிக்கிழமை அன்று அவசர சான்றிதழ்களுக்காக சிறப்பு முகாம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்திய தூதரகத்துடன் நேரலை சந்திப்பிற்கு முன்னரே பதிவு செய்த விண்ணப்பதாரர்கள், தங்களின் அவசர POA/PCC/Original certificate சான்றளிப்பு போன்றவற்றிற்கான கோரிக்கைகளை 33059647 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் இன்றுக்குள் (09.09.2020) பின்வரும் வடிவத்தில் அனுப்பலாம் என கூறியுள்ளது.

  •  பெயர்
  •  பாஸ்போர்ட் எண்
  • QID எண்
  • மொபைல் எண்
  • மின்னஞ்சல் முகவரி
  • சேவையின் தன்மை
  • அவசரத்தின் தன்மை
  • ஏற்கனவே எடுக்கப்பட்ட நியமனம் தேதி

நியமனம் உறுதிப்படுத்தல் மற்றும் தாங்கள் வரவேண்டிய நேரம் பின்னர் வாட்ஸ்அப்பில் தெரிவிக்கப்படும் என்றும், தூதரக முகாமின் போது, அனைத்து COVID-19 சுகாதார விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Related posts

கத்தாரில் இன்று முதல் அனைத்து கடைகள் மற்றும் வியாபார நடவடிக்கைகளை மூட உத்தரவு.!

Editor

கத்தாரில், காலாவதியான உணவுப்பொருட்களுடன் மூன்று நபர்கள் கைது.!

Editor

COVID-19: கத்தாரில் இன்று மேலும் 5 பேர் பலி.!

Editor