சவூதி அரேபியா மற்றும் ஓமனிலிருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் சிறப்பு விமானங்கள் அறிவிப்பு.!

Air India express flight
Pic: Air India Express

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வரும் வந்தே பாரத் எனும் திட்டத்தின் கீழ், வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா மற்றும் ஓமன் நாட்டிலிருந்து தமிழகத்திற்கு செல்லவிருக்கும் விமானங்களின் விபரங்களை அந்தந்த நாடுகளில் இருக்கும் இந்திய தூதரகங்கள் வெளியிட்டுள்ளன.

இதையும் படிங்க : கத்தார் To இந்தியா மேலும் 10 விமானங்கள் இயக்கப்படும்; இந்திய தூதரகம் அறிவிப்பு.!

அதன்படி, சவூதி அரேபியாவிலிருந்து மூன்று விமானங்கள் தமிழகத்திற்கு இயக்கப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சவூதி
அரேபியாவிலிருந்து தமிழகத்திற்கு
இயக்கப்படவிருக்கும் அனைத்து
விமானங்களும் சென்னை சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் அட்டவணைப்படி, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு முதலாவதாக சவூதி அரேபியாவின் ரியாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜூன் 4ஆம் தேதி ஒரு விமானமும், இரண்டாவதாக தமாம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜூன் 5ம் தேதி ஒரு விமானமும் மூன்றாவதாக ஜித்தா சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜூன் 6ஆம் தேதி ஒரு விமானமும் இயக்கப்படும் என சவூதி அரேபியாவிற்கான இந்திய தூதகரம் அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவூதி அரேபியாவை தொடர்ந்து ஓமன் நாட்டிலிருந்தும் தமிழகத்திற்கு சிறப்பு விமானம் இயக்கப்படவுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஓமன்
நாட்டின் மஸ்கட் சர்வதேச விமான
நிலையத்திலிருந்து சென்னை சர்வதேச
விமான நிலையத்திற்கு ஜூன் 7ஆம் தேதி ஒரு சிறப்பு விமானம் இயக்கப்படும் என ஓமன் நாட்டிற்கான இந்திய தூதரகம்
வெளியிட்டுள்ள அட்டவணையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஒரு விமானம் மட்டுமே ஓமனிலிருந்து தமிழகத்திற்கு செல்ல ஒதுக்கப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது‌.

Source : Khaleej Tamil