கத்தாரில் சுமார் 10 மில்லியனைத் திருடிய இணைய மோசடி கும்பல் கைது..!

Cyber fraud gang that stole nearly QR10mn busted
Pic: MOI

கத்தார் உள்துறை அமைச்சகத்தின் பொருளாதார மற்றும் சைபர் குற்றங்களை தடுக்கும் துறை “Uncovering the Mask’ என்ற செயல்பாட்டில் கீழ், இணைய மோசடி மற்றும் வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை திருடும் மோசடி கும்பலை அதிரடியாக கைது செய்துள்ளது.

இந்த கும்பல்கள், உங்கள் டெபிட் கார்ட் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும், நீங்கள் பெரிய தொகையை பரிசாக வெற்றிபெற்று உள்ளீர்கள் எனவும்  குறுஞ்செய்திகளை அனுப்பி மோசடியில் ஈடுபட்டுள்ளது.

இதையும் படிங்க: தோஹா மெட்ரோ மீண்டும் செயல்பட தயாராகி வருகிறது..!

இந்த மோசடி பரிவர்த்தனைகளின் மொத்த அளவு கிட்டத்தட்ட 10 மில்லியன் கத்தார் ரியால்களை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சகம் அனைத்து குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களையும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், இது போன்ற மோசடி குறுந்தகவல்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், அமைச்சகம் குறுந்தகவல்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்க வங்கி அதிகாரிகள் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அணுமாரும் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் இருந்து இலங்கைக்கு மேலும் ஒரு சிறப்பு விமானம் அறிவிப்பு..!

 

கத்தார் செய்திகளை உடனுக்குடன்  தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

 Facebook

Twitter

Instagram