கத்தாரில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அறிவிப்பு..!

Sri Lanka Embassy in Qatar.

கத்தார் நாட்டில் கொரோனா வைரஸ் பரவி உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், கத்தார் நாட்டில் உள்ள இலங்கையர்கள் அனைவரையும் மிகவும் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு இலங்கை தூதரக விசேட அறிவிப்பு செய்துள்ளது.

இது சம்பந்தமாக இலங்கை தூதரகத்தின் அறிவுறுத்தல்களையும், உதவிகளையும் பெற்றுக் கொள்வதற்காக இலங்கை தூதரகத்தில் 24 மணிநேர விசேட (00974 74703413) தொலைபேசி சேவையை தொடங்கி உள்ளதாக கூறியுள்ளது.

மேலும், கீழ்க்கண்ட தொலைபேசி எண்களை அழைப்பதன் மூலம் தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

00974 70088771
0097477455895
00974 30511333
00974 31114020

இந்த தகவலை, கத்தாரில் உள்ள இலங்கை தூதரகம் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.