தனிமைப்படுத்துதல் குறித்த கத்தார் இலங்கை தூதரகத்தின் விசேட அறிவிப்பு.!

SriLanka Embassy special notice
Pic: Sri Lanka Embassy in Qatar

கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள இலங்கை தூதரகம், அரசாங்க தனிமைப்படுத்தலுக்கான எதிர்கால பதிவுகள்  http://covid19.slembassy-qatar.com என்றற இணையதளம் மூலமாக மட்டுமே இடம்பெறும் என அறிவித்துள்ளது.

ஹோட்டல் தனிமைப்படுத்தலின் கீழ் இலங்கைக்கு பயணிக்க விரும்புவோர் மேல் குறிப்பிட்ட இணையத்தளத்தின் மூலம் பதிவு செய்ய தேவையில்லை என்றும், 24-02-2020 முதல் ஹோட்டலுக்கான இணையதள பதிவு முறை (ஆன்லைன் பதிவு) நிறுத்தப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளது.

கத்தாரின் இந்த பகுதியில் புதிய பெட்ரோல் நிலையம் திறப்பு.!

கத்தாரில் உள்ள இலங்கை தூதரகம் ஒவ்வொரு வாரத்திலும் ஞாயிற்றுக்கிழமை தோரும் வாராந்திர விமான சேவை அட்டவணையை தூதரக இணையதளம் மற்றும் முகநூல் மூலம் வெளியிடும் என கூறியுள்ளது.

ஹோட்டல் தனிமைப்படுத்தலின் கீழ் இலங்கைக்கு பயணிக்க விரும்புவோர் தயவுசெய்து குறித்த தினங்களில் குறித்த நேரத்தில் தூதரகத்துக்கு விஜயம்செய்து ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்கான கட்டணங்களை செலுத்துமாறு இலங்கை தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.