கத்தார் நாட்டில் இருந்து 265 இலங்கையர்கள் தாயகம் சென்றடைந்தனர்.!

Image Credits: Sri Lanka Embassy in Qatar

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்ட சர்வதேச விமானப் போக்குவரத்துத் தடையின் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இலங்கையர்களை மீண்டும் தாயகத்திற்கு அழைத்து செல்லும் திருப்பி அனுப்பும் நடவடிக்கையை இலங்கை அரசானது தற்பொழுது மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கத்தார் நாட்டில் சிக்கித்தவித்த 265 இலங்கையர்களை ஏற்றிக்கொண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி கட்டுநாயக்க சர்வதேச விமான
நிலையத்திற்கு வந்தடைந்துள்ளதாக
கத்தாரில் உள்ள இலங்கை தூதரகம்
அறிவித்துள்ளது. பயணிகளில்
பெரும்பாலோர் கத்தாரில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாடுகளில் இருந்து வந்த
இலங்கையர்கள் அனைவரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு PCR சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்
என்றும் கூறப்பட்டுள்ளது.

கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முன்பாக வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமன் நாட்டில் சிக்கித்தவித்த 290 குடிமக்களை இலங்கை அரசு தாயகத்திற்கு மீட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.